போக்சோ குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை
மாதவன்
திருவண்ணாமலையில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை வ.உ.சி நகரை சேர்ந்த மாதவன் (40),என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஹேமமாலினி வழக்குபதிவு செய்து மாதவனை கைது செய்து சிறையில் அடைத்தார். அந்த வழக்கு சம்பந்தமான விசாரனை திருவண்ணாமலை POCSO நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி மாதவனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். அதன் பேரில் மாதவன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story