வரதட்சணை கொடுமையில் பெண் எரித்து கொலை – மாமியார் மற்றும் கணவனுக்கு ஆயுள் தண்டனை

வரதட்சணை கொடுமையில் பெண் எரித்து கொலை – மாமியார் மற்றும் கணவனுக்கு ஆயுள் தண்டனை
சிவகாசியில் மருமகளை எரித்து கொலை செய்த வழக்கில் மாமியார், கணவனுக்கு ஆயுள் தண்டனை.
விருதுநகர் மாவட்டம், செங்கமலநாச்சியாபுரம் பகுதியில் வரதட்சணை கேட்டு மருமகளை கொலை செய்த மாமியார் மற்றும் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதாய் (வயசு 51 )மற்றும் இவரது மகன் ஜோதிமணி வயது 27 இந்த ஜோதிமணி இரண்டாவதாக கார்த்திஸ்வரி (வயது 21) என்பவரை வரை திருமணம் செய்துள்ளார்.இந்த நிலையில் குடும்பப்பிரச்சனை காரணமாக கடந்த 05-02-2022 ஆம் தேதி அன்று சின்னதாயிம்,ஜோதி மணியும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கார்த்தீஸ்ரியை தாக்கி உள்ளனர்.

மேலும் ஆத்திரத்தில் சின்னத்தாயும்,கணவர் ஜோதிமணியும் சேர்ந்து வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து கார்த்தீஸ்வரி மீது ஊற்றி தீ வைத்துள்ளனர்.இதில் பரிதாபமாக சம்பவ இடத்தில் கார்த்திஸ்வரி இறந்துவிட்டார். இது தொடர்பாக கார்த்தீஸ்வரி குடும்பத்தார் கொடுத்த புகார் அடிப்படையில் திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

.இதில் சின்ன தாயையும், இவரது மகன் ஜோதி மணியையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பகவதியம்மாள் இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா பத்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினர்.

Tags

Next Story