தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

ராணிப்பேட்டையை சேர்ந்த வாலிபருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது இக்பால். இவரது மகன் இம்ரான் (25). கடந்த 2022 மார்ச் மாதம் 18ம் தேதி முகமது இக்பாலை அவரது மகன் இம்ரானே கொலை செய்த குற்றத்திற்காக ஆற்காடு நகர காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு இம்ரான் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இரண்டில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் இறுதி விசாரணை நடந்தது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இம்ரானுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூபாய் பத்தாயிரம் அபராத விதித்து நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.

Tags

Next Story