கொலை வழக்கில் ஆயுள் தண்டனை: தலைமறைவானவர்கள் கைது
கோப்பு படம்
நாகர்கோவில் அருகே தம்மத்து கோணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரை கடந்த 2011-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், அவரது சகோதரர் பாபு, அய்யப்பன் ஆகியோர் கொலை செய்தனர். இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கு விசாரித்து நீதிபதி கடந்த 2019-ம் ஆண்டு மணிகண்டன், பாபு, அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து 3 பேரும் ஜெயிலில் அடைக் கப்பட்டனர். இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் இவர்கள் மேல் முறையீடு செய்தனர். பின்னர் 3 பேரும் ஜாமீனில் விடுதலையானார்கள். இந்த நிலையில் 2022-ம் ஆண்டு கீழ் கோர்ட் இவர்களுக்கு விதித்த தண்டனையை ஐகோர்டு உறுதி செய்தது. மணிகண்டன், பாபு, அய்யப்பன் 3 பேரும் 2 வார காலத்திற்குள் சரணடைய வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில் அய்யப்பன் மட்டும் சரண் அடைந்தார். மணிகண்டன், பாபு இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.
போலீசார் இருவரையும் தேடி வந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பாபுவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். ஒரு ஆண்டுகளுக்கு பிறகு தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.