வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்!

வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்!
X

பயிற்சி முகாம்

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி வாகைகுளம் புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கான இம்மையிலும் மறுமையிலும் பலன்தரக் கூடிய வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

. இப்பயிற்சியில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண் பாபு, பொதுமேலாளர் (வளர்ச்சி) ஜெயக்குமார், பொதுமேலாளர் (நிர்வாகம்) கிருஷ்ணகுமார், ஸ்காட் கல்விக் குழும திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளின் இயக்குநர் சி.கே. இரவி சங்கர், முதல்வர் ஜாஸ்பர் ஞான சந்திரன், மாணவர் சேர்க்கை இயக்குநர் ஜான் கென்னடி, இயக்குநர் ஜார்ஜ் கிளிண்டன், நிர்வாக அதிகாரிகள் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஆழியார் அறிவு திருக்கோவில் பேராசிரியர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியருமான பொறியாளர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அவர் தனது சிறப்பு உரையில் மாணவர்கள் இளம்பருவத்தில் கற்கும் வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இம்மையிலும் மறுமையிலும் நிச்சயம் பலன் தரும். உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மன ஆரோக்கியம், மன அமைதி, அதிக மதிப்பெண் தேர்ச்சி பெறுதல், பக்குவம் அடைந்த பண்பாடான வாழ்க்கை போன்ற நற்பலன்கள் இத்தகைய வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெற முடியும் என்று குறிப்பிட்டார். பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை திறன் மேம்பாட்டு துறை அதிகாரிகள் ஜோ பேட்டரிக் ஞானராஜ், பாலின் விசு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story