திருச்சியில் விரைவில் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி

திருச்சி தெப்பக்குளத்தில் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சிக்கான தீம்கள், நேரம் மற்றும் நுழைவு கட்டணம் ஆகியவை இறுதி செய்யும் தீர்மானத்தை மாநகராட்சி நிறைவேற்றியுள்ளது.

அருள்மிகு தாயுமானசுவாமி கோயிலின் தெப்பக்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் பாரம்பரிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒளி மற்றும் ஒலி காட்சிக்கான தீம்கள், நேரம் மற்றும் நுழைவுக் கட்டணங்களை இறுதி செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக ஒளி மற்றும் ஒலி காட்சியை மாநகராட்சி முன்மொழிந்ததை தொடர்ந்து தெப்பக்குளத்தில் ₹8.8 கோடி செலவில் லேசர் விளக்குகள் மற்றும் மிதக்கும் கட்டுப்பாட்டு குழு அமைப்புகளை நிறுவப்பட்டது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியை டிசம்பர் 15, 2023 அன்று தொடங்கி வைத்தார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை மூன்று நிகழ்ச்சிகளும் மற்ற நாட்களில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை இரண்டு நிகழ்ச்சிகளை நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி தாயுமானவர் கோயில், ஸ்ரீரங்கம் கோயில், திருவானைக்கோயில் கோயில், சமயபுரம் கோயில், கல்லணை , மலைக்கோட்டை, மற்றும் கரிகால சோழன் ஆகியோரின் வரலாறு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணப்படங்கள் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உள்ளது. தெப்பக்குளம் கரையில் உள்ள பார்வையாளர்கள் கேலரியில் இருந்து பார்வையாளர்கள் நிகழ்ச்சியை காண wireless ஹெட்ஃபோன்களை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேட்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 8 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கான நுழைவுக் கட்டணமாக ₹25ம், 15 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு நிகழ்ச்சிக்கு ₹50யும் வசூலிக்கபட உள்ளது. பார்வையாளர்கள் கேலரியில் உள்ள குறைந்த இடத்தைக் கருத்தில் கொண்டு,

ஒரு நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கையை 30 உறுப்பினர்களாகக் கட்டுப்படுத்திய மாநகராட்சி, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனமான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளது.

Tags

Next Story