சேலத்தில் விடிய விடிய சாரல் மழை

சேலத்தில் விடிய விடிய சாரல் மழை

 சேலத்தில் சாரல் மழை தொடர்ந்து பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சேலத்தில் சாரல் மழை தொடர்ந்து பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக 2 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நாள்தோறும் அவதியுற்று வந்தனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் காலையில் வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தாலும், மதியத்துக்கு பிறகு மிதமான மழை பெய்து வருகிறது.

இதன் மூலம் வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது. அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நேற்று முன்தினம் ஏத்தாப்பூர், தம்மம்பட்டி, சங்ககிரி உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. மாநகரில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் மிகவும் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. பின்னர் பிற்பகலில் சாரல் மழை பெய்தது. இதையடுத்து இரவு முழுவதும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது.

Tags

Next Story