நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் !!!

நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் !!!

நாமக்கல் 

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில் கூறியுள்ளதாவது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்தது. பகல் வெப்பம் 93.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும், இரவு வெப்பம் 64.4 டிகிரி பாரன்ஹீட்டாகவும் நிலவியது.

மே- 25ம் தேதி 3 மி.மீ., 26ம் தேதி 6 மி.மீ, 27ம் தேதி 3 மி.மீ, 28ம் தேதி 2 மி.மீ, 29ம் தேதி 1 மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் நேர வெப்பநிலை 86 டிகிரி முதல் 90 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இரவு நேர வெப்பநிலை 73 முதல் 78 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும்.

வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றின் வேகம் தென்மேற்கு திசையில் இருந்து 14 முதல் 20 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். காற்றின் ஈரப்பதம் 30 முதல் 90 சதவீதம் வரை இருக்கும். கோழிப்பண்ணையாளர்களுக்கு கடந்த வாரம் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல்மூச்சுக்குழல் அயற்சி நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது.

எனவே, பண்ணையாளர்கள் கோழிப்பண்ணைகளில் தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். பண்ணையில் வாரம் இரு முறை கிருமி நாசினி தெளிக்கவேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தீவனத்தில் வைட்டமின் சி மற்றும் செலினியம் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story