நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான கோடை மழை!
நாமக்கல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை 7 மணிக்கு மிதமான மழை பெய்தததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாகக் காணப்பட்டது. பொதுமக்கள் வெளியே செல்லாது வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.கடுமையான வெப்பமே நீடித்து வந்தது.
இதனால் பொதுமக்கள் மழை பெய்ய வருண பகவானை வேண்டி வந்தனர். பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடுகள், தொழுகைகள் நடைபெற்றது...இந்நிலையில்,இன்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் நாமக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வெயில் தாக்கம் காரணமாக தொடர்ந்து அவதியுற்று வந்த மக்களுக்கு இந்த மழை சற்று நிம்மதியைத் தந்துள்ளது.
Next Story