மின்னல் வேகத்தில் பாயும் மினி பேருந்துகள்- மக்கள் அச்சம்
மின்னல் வேகத்தில் பாயும் மினி பேருந்துகள்
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திற்குள் வரும் மினி பேருந்துகளால் பயணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் உயிர் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்குள் உள்ளே நுழையும் பகுதியில் தினந்தோறும் விபத்துக்கள் நடப்பதாக அப்பகுதி வணிகர்கள் கூறுகின்றனர். தற்போது மினி பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றுவதற்கு மாந்கராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மினி பேருந்துகளிடையே பயணிகளை அதிகம் எடுக்கும் போட்டியில் பேருந்து நிலையத்திற்குள் மின்னல் வேகத்தில் பாயும் மினி பேருந்துகளால் அவ்வப்போது ஆபத்துக்கள் ஏற்பட்ட வன்னம் உள்ளது. இதனை மாந்கராட்சி அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாததே காரணம் என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பேருந்து நிலையம் முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தும் இது நாள் வரை அதனை நிறைவேற்றாமல் மாநகராட்சி நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது. இன்று காலையில் பேருந்து நிலையம் முன்பு சென்று கொண்டிருந்த மின் வாரிய ஊழியர் ஒருவர் மின்னல் வேகத்தில் வந்த மினி பேருந்தில் சிக்கி படுகாயமடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். மொத்தத்தில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பாதுகாப்பில்லாத பேருந்து நிலையமாக இயங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story