பிரதமரை போல பொன் ராதாகிருஷ்ணனும் பொய் பேசுகிறார்: அமைச்சர்
அமைச்சர் மனோ தங்கராஜ்
பிரதமரை போல பொன் ராதாகிருஷ்ணனும் பொய் பேசுகிறார் என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று நாகர்கோவில் வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:- திமுக ஆட்சி வந்த பின்னர்தான் குமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது 5 குவாரிகள் மட்டுமே உள்ளன. இங்கிருந்து கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்லப்படுவதில்லை. மாநில வீட்டு மாநிலம் கனிம வளங்கள் கொண்டு செல்வதை ஒன்றிய அரசு தான் தடுக்க வேண்டும். இது கூட ஒரு முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு தெரியவில்லை. அவருக்கு ஓட்டு போட்டு என்ன நடக்கப் போகிறது? என்பது தெரியவில்லை. எனக்கு பினாமி பெயரில் லாரிகள் இருப்பதாக கூறி இருக்கிறார். இதை நிரூபித்தால் அதை அவரிடமே ஒப்படைக்க நான் தயாராக உள்ளேன். இதை சவாலாகவே தெரிவிக்கிறேன். பிரதமர் மோடியை போல் பொன் ராதாகிருஷ்ணன் பொய்யாக பேச தொடங்கியுள்ளார். பொன்முடி விவகாரத்தில் தமிழ்நாடு கவர்னர் அவமானப்பட்டு இருக்கிறார். இதைவிட கேவலம் வேறொன்றுமில்லை. கவர்னரை விட இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் பெரிது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story