மின்சாரம் தாக்கி பொக்லைன் ஆப்ரேட்டர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி பொக்லைன் ஆப்ரேட்டர் உயிரிழப்பு

பைல் படம் 

தாரமங்கலத்தில் மின்சாரம் தாக்கியதில் பொக்லைன் ஆப்ரேட்டர் உயிரிழந்தார்.

தாரமங்கலம் அருகே கருக்குப்பட்டி பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் பழனிசாமி (வயது 32). பொக்லைன் ஆபரேட்டர். இவர், நேற்று மாலை தன்னுடைய வீட்டு அருகில் இருந்த மாட்டு கொட்டகையில் மின்விளக்கு எரியாததால் அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பழனிசாமி கீழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தாரமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Tags

Next Story