மண்ணின் வளம் காக்க திரவ உயிர் உரங்கள் - அதிகாரிகள் அறிவுறுத்தல்
வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அனைத்து பயிர்களுக்கும் ஜிங்க் பாக்டீரியாவை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்கிறது. விதை நேர்த்தி செய்ய 50 மிலி ஜிங்க் பாக்டீரியா திரவ உயிர் உரத்தை தேவையான அளவு ஆறிய கஞ்சி யுடன் ஒரு ஏக்கருக்கான விதையுடன் கலந்து 30 நிமி டங்கள் நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்கவும். மேலும் ஏக்கர் ஒன்றுக்கு 100 மி.லி திரவ உயிர் உரத்தை தேவையான அளவு தண்ணீரில் கலந்து வேர் நனையுமாறு 30 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் நடவு செய்யவும்.
ஏக்கர் ஒன்றுக்கு 200 மி.லி திரவ உயிர் உரத்தை மக்கிய தொழு உரத்துடன் நன்கு கலந்து நடவுக்கு முன் வயலில் இடவும். நீர் வழி உரமிடுதல் ஒரு லிட் டர் தண்ணீருக்கு 1 மி.லி திரவ உயிர் உரம் என்ற அளவில் விதைப்பு செய்யப்பட்ட நாளிலிருந்து 15, 30 மற்றும் 45 நாட்களில் உபயோகிக்கவும். மண்ணில் கரையாத நிலையில் இருக்கும் துத்த நாக சத்தை விடுவித்து, நீரில் கரையும் துத்தநாக சத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கிறது. மேலும் ஜிங்சல்பேட் இடுவது 50 சதவீதம் அளவு குறைத்துக்கொள்ளலாம். மேலும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. பயிரின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.
மகசூல் 17-19 சதவீ தம் வரை அதிகரிக்கிறது. மேலும், மண் வளத்தை காத்து, குறைந்த செலவில் அதிக லாபம் அளிக்கிறது. குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக வைக்கவும். காலாவதி தேதிக்கு முன்னரும். பின்னரும் பயன்படுத்தலாம். இரசாயன உர பயன்பாட்டிற்கும் உயிர் உர பயன்பாட்டிற்கும் இடையே ஒருவார கால இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.