திருக்கோவிலூர் அருகே மது பாட்டில் கடத்தியவர் கைது

திருக்கோவிலூர் அருகே மது பாட்டில் கடத்தியவர் கைது

காவல்துறை விசாரணை


திருக்கோவிலூர் அருகே மது பாட்டில் கடத்தியவர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அரகண்டநல்லுார் போலீசாரின் ரோந்து பணியில் மது பாட்டில் வைத்திரந்தவரை கைது செய்தனர். அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத், சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆற்காடு டாஸ்மார்க் அருகே சென்றபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் பைகளில் மது பாட்டில்களை எடுத்துச் சென்றவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். பையூர் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன், 57; எனவும், கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை கடத்திச்சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து 56 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story