நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும்

சேலம் மாவட்ட ஆட்சியர்

சேலத்தில் தேர்தலை முன்னிட்டு நான்கு நாட்கள் மதுக்கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. எனவே மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி காலை 10 மணி முதல் 19-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை 3 நாட்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் மாதம் 4-ந்தேதி என மொத்தம் 4 நாட்களுக்கு அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்கள், மற்றும் எப்.எல்.1 முதல் எப்.எல்.11 வரை அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும்.

இந்த நாட்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story