மதுபானங்களை பதுக்கி விற்றவர் கைது
கடத்தூர் அருகே வீரகவுண்டனூரில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் காவல் நிலையத்திற்கு வீரகவுண்டனூர் பகுதியில் மது பதுக்கி விற்பனை செய்வதாக கடத்தூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், மாலை காவல்துறையினர் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை ஈடுபட்டனர் அப்போது அப்பகுதியில், இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை கடத்தி விற்பனை செய்ததாக முருகன் வயது 42 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story