ஆழியூர் பிரிவு சாலை அருகே பைக்கில் சாராயம் கடத்தியர் கைது

நாதை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஆழியூர் பிரிவு சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஆழியூர் பிரிவு சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்தவர் கைது 110 லிட்டர் பாடி சாராயம் பறிமுதல் நாகை மாவட்டத்தில் சாராய கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின் பெயரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆழியூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை ஏற்பட்டனர் அப்போது ஆழியூர் பிரிவு சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பெருங்கடம்பூர் ஜீவா தெரு பகுதியை சேர்ந்த கஜேந்திரன் மகன் மாரி என்கிற மாரிசெல்வன் வயது 23 என்பதும் இரு சக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இது தொடர்பாக மாரிச்செல்வனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கடத்தி வரப்பட்ட 110 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்

Tags

Read MoreRead Less
Next Story