சிறைவாசிகளுக்கு எழுத்தறிவு திட்ட மதிப்பீட்டு தேர்வு

சிறைவாசிகளுக்கு எழுத்தறிவு திட்ட மதிப்பீட்டு தேர்வு

எழுத்து தேர்வு 

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட சிறைவாசிகளுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வை புதுக்கோட்டை மாவட்ட சிறையில் 61 கைதிகள் எழுதினர்.

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் 2023-2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்ட சிறைச்சாலைகளில் உள்ள 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத சிறைவாசிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 6 மாதங்களாக தன்னார்வலர்களைக் கொண்டு 9 மாவட்ட சிறைச்சாலைகளில் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் இரு தன்னார்வலர்கள் மூலம் கற்போர் மையங்களில் 61 சிறைவாசிகளுக்கு கடந்த 6 மாதமாக அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் வாழ்வியல் சார் திறன் குறித்த பயிற்சி நடத்தப்பட்டது. இந்த சிறைச்சாலை கற்போர் மையங்களில் பயின்று வந்த அனைவருக்கும் சிறப்பு எழுத்தறிவுத் திட்ட மதிப்பீட்டுத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் மா. மஞ்சுளா, சிறை அலுவலர் எஸ்.கே. கார்த்திக், பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் ஜெ. சுதந்திரன் உள்ளிட்டோரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 61 பேரும் தேர்வில் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story