எலச்சிபாளையத்தில் எழுத்தறிவு திட்டம் துவக்கம் !
எழுத்தறிவு திட்டம்
எலச்சிபாளையம் ஒன்றியத்தில், எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டது. எலச்சிபாளைம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 63 அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் நேற்று புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டமானது, 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களை குடியிருப்பாரியாக கண்டுபிடித்து அவர்களுக்கு எழுத்தறிவு, மற்றும் அடிப்படை செயல்பாடுகள், அடிப்படை எண்கள் பொது தகவல்கள் சார்ந்து கற்றுக் கொடுக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தில், 190 ஆண்கள் 655 பெண்கள் என மொத்தம் 845 பேர் கற்போர்களாகவும், 63 பேர் தன்னார்வலர்களாகவும் செயல்பட உள்ளனர். முன்னதாக, எலச்சிபாளையம் துவக்கப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்க விழா நடந்தது. இதில், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் முத்துகுமார் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் வெங்கடாசலம் துவங்கி வைத்தார். வட்டார வாமைய மேற்பார்வையாளர் [பொ]மகாலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.