விழுப்புரத்தில் கல்லூரி மாணவர்களுக்கான இலக்கிய விழா போட்டி
மாணவர்களுக்கான இலக்கிய போட்டி
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் சார்பில் இளைஞர் இலக்கிய திருவிழா, தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்துடன் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இணைந்து இளைஞர் இலக்கிய விழா போட்டிகளை நடத்தியது.
இப்போட்டியை கல்லூரி முதல்வர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். போட்டி ஒருங்கிணைப்பாளர் குணசேகர் வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் கலைச்செல்வி, மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நூலக அலுவலர் காசீம், நோக்கவுரையாற்றினார். மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் சொக்கநாதன் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட மைய நூலகர் இளஞ்செழியன் விளக்கவுரையாற்றினார், இப்போட்டிகள் 2 நாட்கள் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் அன்பழகன் நன்றி கூறினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பின்னர் பரிசளிப்பு விழா நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.