தமிழ் வளர்ச்சி துறை சார்பில் இலக்கிய மன்ற போட்டிகள்

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் இலக்கிய மன்ற போட்டிகள்

வெற்றி பெற்ற மாணவர்கள் 

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2023-24ஆம் ஆண்டிற்கு மாவட்ட நிலையில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையேயான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கவிதை போட்டியில் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் முதலாமாண்டு பயிலும் மாணவி கதனலட்சுமி முதல் பரிசும், உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாமாண்டு பயிலும் மாணவன் மு. மாரிமுத்து இரண்டாம் பரிசும், ஏ.வி.யி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் முதலாமாண்டு பயிலும் மாணவி வித்யாபாரதி மூன்றாம் பரிசும் பெற்றனர்.

கட்டுரைப் போட்டியில் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு பயிலும் மாணவி வி.ஜோதிபிரீத்தா முதல் பரிசும், உடுமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் இரண்டாமாண்டு பயிலும் மாணவி ப.கௌதமி இரண்டாம் பரிசும், ஏ.வியி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் கணினி பயன்பாடு இரண்டாமாண்டு பயிலும் மாணவி பயிலும் மாணவி ரா.முத்துலட்சுமி மூன்றாம் பரிசும் பெற்றனர்.

பேச்சுப்போட்டியில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இரண்டாமாண்டு இளம் வணிகவியல் பயிலும் மாணவன் நாகராஜ் முதல் பரிசும், அவினாசி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பொருளியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவன் சீ.சஞ்சய் குமார் இரண்டாம் பரிசும். ஏ.வி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவி வெ.சௌமியா மூன்றாம் பரிசும் பெற்றனர். மாவட்ட நிலையில் நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000/-ம், இரண்டாம் பரிசு ரூ.7000ம் மூன்றாம் பரிசு ரூ.5000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் மாவட்ட கலெக்டர் மூலமாக வழங்கப்படும். இந்நிகழ்ச்சிகளில் திருப்பூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் புவனேஸ்வரி, அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story