லிட்டில் ஏஞ்சல்ஸ் ELYSIUM - 2024 !

லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளியின் 36-வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோடு அணியாபுரத்தில் அமைந்துள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி முன்னணி கல்வி பள்ளிகளில் ஒன்றாகும். பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர், நடுவர் மணிகண்டன் பங்கேற்றார். மேலும் நல்லாசிரியர் விருது பெற்றவரும் பாரதி பள்ளியின் உதவி தலைமை ஆசிரியருமான கோபால நாராயணமூர்த்தி, பள்ளியின் தாளாளர் வெங்கடாஜலம், பள்ளியின் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஆர்.துரைசாமி, பி.எட் கல்லூரி முதல்வர், பள்ளியின் இயக்குனர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். விழாவில் வரவேற்புரைக்குப் பின்பு பள்ளியின் ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. அதன் பிறகு சிறப்பு விருந்தினருக்கு மரியாதை நிமித்தமாக பொன்னாடை போத்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன் பிறகு மேடைப் பேச்சாளர் கோபால நாராயணமூர்த்தி சிறப்புரையாற்றினார். இதனை அடுத்து சிறப்பு விருந்தினர் பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். அதன் பிறகு மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை அடுத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இறுதியில் நன்றியுரை வாசிக்கப்பட்டு தேசிய கீதத்த்துடன் விழா நிறைவடைந்தது.

Tags

Next Story