சிறுக சிறுக சேர்த்த பணம் கண்ணிமைக்கும் நேரத்தில் களவு

சிறுக சிறுக சேர்த்த பணம் கண்ணிமைக்கும் நேரத்தில் களவு
X

சிசிடிவி காட்சி 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சொக்கலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (58). இவர் இருபது வருடமாக செலுத்தி வந்த இன்சூரன்ஸ் திட்டம் மூப்படைந்ததை தொடர்ந்து நேற்று திருப்பத்தூர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ஆசிரியர் நகர் பகுதிக்கு வந்துள்ளார்.பணத்தை எடுத்துக் கொண்டு வருவதை நோட்டமிட்ட மர்ம கும்பல் சக்தியை பின் தொடர்ந்து வந்துள்ளது. அப்போது சக்தி ஆசிரியர் நகர் நகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் தனது ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்று உள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகன பெட்டியில் வைத்திருந்த 6 லட்ச ரூபாயை கண்ணிமைக்கும் நேரத்தில் எடுத்துக் கொண்டு தப்பி சென்றார். சக்தி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகே உள்ள ஏசியன் பெயிண்ட் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 20 வருட காலமாக சிறுக சிறுக சேமித்த பணம் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story