வறண்டு கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி.

வறண்டு கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி.

வறண்டு கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி.

காப்பூர் கண்டிகை கிராமத்தில் வறண்டு கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி.
திருத்தணி பள்ளிப்பட்டு ஒன்றியம் நொச்சிலி ஊராட்சிக்கு உட்பட்டது காப்பூர் கண்டிகை. இந்த கிராமம் நொச்சிலி காப்புக்காடை ஒட்டி அமைந்துள்ளது. கிராமத்தின் வடக்கில் பழமையான ஆலமரம் உள்ளது. மேய்ச்சல் வெளிக்கு சென்று திரும்பும் கால்நடைகள், இந்த ஆலமரத்தின் அடியில் ஓய்வெடுக்கின்றன. இந்தப் பகுதியில் கிராம வனக்குழு கட்டடத்தை ஒட்டி, கால்நடை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியை நிரப்ப குழாய் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் நிரப்பப்படுவது இல்லை. இதனால் இந்த குடிநீர் தொட்டி பயனின்றி சருகுகள் மக்கும் குப்பை தொட்டியாக மாறியுள்ளது. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோடை காலம் துவங்க உள்ள நிலையில், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story