தீபாவளி பண்டிகையால் களைகட்டிய கால்நடை சந்தை

தீபாவளி பண்டிகையால் களைகட்டிய கால்நடை சந்தை

தீபாவளி பண்டிகையால் களைகட்டிய கால்நடை சந்தை


தீபாவளி பண்டிகையால் களை கட்டிய செம்பட்டி சந்தையில் ஏராளமான வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர்.

செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். ஆடு, மாடுகள் மட்டுமின்றி இவற்றின் தோல் விற்பனையும், வியாழன் இரவு முதலே துவங்கும். சுற்று கிராமங்கள் மட்டுமின்றி திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தேனி மாவட்ட வியாபாரிகளும் இங்கு குவிவது வாடிக்கை.தீபாவளியை முன்னிட்டு நேற்று இச்சந்தை களை கட்டியது.

ஆடு, மாடு, கோழி எடை, வயது, பருமன் போன்றவற்றிற்கேற்ப விலை அதிகரித்து இருந்தது. முந்தைய வாரங்களைவிட வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். தேவை அதிகரிப்பால் கால்நடைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 10 கிலோ எடை ஆட்டுக்குட்டி தலா 12 முதல் 18 ஆயிரம் வரை விற்பனையானது.அதிக விலை கிடைத்ததால் வியாபாரிகள், இடைத்தரகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story