புளுதியூர் வாரச்சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம்

புளுதியூர் வாரச்சந்தையில் ரூ.45 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது.
தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன் கிழமை கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை, இறைச்சி மாடு, நாட்டுக் கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.நேற்று நடந்த சந்தை யில் ஒரு மாடு 6,000 முதல் 47,500 ரூபாய் வரையும், ஆடுகள் 5,200 முதல் 9,500 ரூபாய் வரையிலும் விற்பனையானது. நேற்றைய சந்தையில் 45 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்

Tags

Next Story