தொடர் மழையால் வாரச்சந்தையில் கால்நடை விற்பனை மந்தம்
காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வார சந்தையில் கால்நடைகள் விற்பனை மந்தமாக நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலத்தில், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வரு கின்றனர். நேற்று நடந்த சந் தையில், சுமார் 450 மாடுகள், 500 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது
. இதில் 25 லட்சத்திற்கு மாடுகளும், 27 லட்சத்திற்கு ஆடுகளும் விற்பனையானது.நாட்டுக் கோழி 3 லட்சத்திற்கு விற்றது. கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடை வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டது. தொடர் மழையால் வெளி மாவட்ட வியாபாரிகள் அதிக அளவில் வராததால், கால்நடை விற்பனை மந்தமாக இருந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story