கால்நடைகளுக்கான  தடுப்பூசி முகாம் - ஆட்சியர் துவக்கி வைப்பு

கால்நடைகளுக்கான  தடுப்பூசி முகாம் - ஆட்சியர் துவக்கி வைப்பு

கால்நடை தீவனம் வழங்கல் 

இராஜாக்கமஙகலம் அருகே நடந்த கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாமை ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமஙகலம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்செல்வவிளை சமுதாய நலக் கூடத்தில் நேற்று நடைபெற்ற கால்நடைகளுக்கான கால்நோய் வாய்நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கலெக்டர் தெரிவித்ததாவது- தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் வாயிலாக நடத்தப்படும் கால்நோய் வாய்நோய் தடுப்புத் திட்டத்தின் 5வது சுற்று துவக்க விழா இராஜாக்கமங்கலம் ஒன்றியம் பெரும்செல்வவிளை கிராமத்தில் துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சுமார் 60,000 கறவை மாடுகள், எருமைகள் மற்றும் காளை மாடுகளுக்கு உதவி மருத்துவர் தலைமையில் கால்நடை பராமரிப்புத்துறையை சார்ந்த பணியாளர்கள் உள்ளடங்கிய 52 குழுக்கள் கிராமங்கள் தோறும் சென்று தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி பணி ஜூன் 10 அன்று துவக்கப்பட்டு தொடர்ந்து 21 நாட்கள் நடைபெறும். என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, பயணாளிகளுக்கு தீவனம் மற்றம் உபபொருட்களை வழங்கினார். நடைபெற்ற விழாவில் மாவட்ட மண்டல இணை இயக்குநர் மரு.ஆர்.இராதாகிருஷ்ணன், ஆவின் பொது மேலாளர் மரு. அருணகிரிநாதன், மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், ஆவின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story