கால்நடைகள்.அப்புறப்படுத்தப்படாததால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்

கால்நடைகள்.அப்புறப்படுத்தப்படாததால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்

திருச்செந்தூர் அருகே மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கால்நடைகளை, அப்புறப்படுத்தப்படாததால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூர் அருகே மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கால்நடைகளை, அப்புறப்படுத்தப்படாததால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதிகளில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் வாய்க்கால்களில் அடித்துவரப்பட்டு உயிரிழந்த கால்நடைகளின் உடல்கள் அப்புறப்படுத்தப்ப படாமல் சாலையின் ஓரத்திலும் வாய்க்கால்களிலும் மிதக்கின்றது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் -சாத்தான்குளம் சாலையில் வடிகால்களின் ஓரம் கால்நடைகளின் உடல்கள் ஒதுங்கிக்கிடக்கிறது.. கால்நடைகளின் உடல்கள் அழுகிய நிலையில் சிதைந்து கடுமையான துர்நாற்ம் வீசுகிறது. திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் அப்புறப்படுத்ப்படவில்லை என கூறும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story