காம்ப்ளான் பாக்கெட்டில் பல்லியின் உடல் பாகங்கள்

காம்ப்ளான் பாக்கெட்டில் பல்லியின் உடல் பாகங்கள்

காம்ப்ளான் பாக்கெட்டில் உயிர் இழந்த நிலையில் பல்லியின் உடல் பாகங்கள் கிடந்தன.


காம்ப்ளான் பாக்கெட்டில் உயிர் இழந்த நிலையில் பல்லியின் உடல் பாகங்கள் கிடந்தன.
நரிக்குடியில் தனியார் மெடிக்கல் ஷாப் கடையில் 1 வயது குழந்தைக்கு வாங்கிய காம்ப்ளான் உணவு பாக்கெட்டில் எலும்புக்கூடாய் செத்து சிதறி கிடந்த பல்லியின் உடல் பாகங்களால் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள என்.முக்குளம் கிராமத்தை சேர்ந்த கணவன், மனைவியான ஜெயக்குமார் - சீதா தம்பதியினர். இதில் ஜெயக்குமார் கட்டிட தொழிலாளியாகவும், சீதா சத்துணவு ஊழியராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு பிறந்து ஒரு வயது கூட பூர்த்தியாகாத நிலையில் கோபிகா என்கிற ஒரேயொரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நரிக்குடி பகுதியில் இயங்கி வரும் தனியார் மெடிக்கல் ஷாப் கடையொன்றிற்கு சென்ற ஜெயக்குமார் தனது குழந்தைக்கு ரூ.129 ரூபாய் மதிப்புள்ள சுமார் 200 கிராம் எடையுள்ள காம்ப்ளான் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். இதனையடுத்து குழந்தையின் தாயான சீதா தனது ஒரு வயது குழந்தைக்கு தினமும் காம்ப்ளானை பாலில் கலந்து உணவாக கொடுத்துள்ளார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் பாக்கெட்டில் இருந்த காம்ப்ளான் உணவு கொஞ்சம் கொஞ்சமாக காலியான நிலையில் அட்டை பெட்டியை பிரித்து அதிலிருந்த மீதமுள்ள காம்ப்ளான் உணவை கரண்டியால் அள்ளிய போது அதில் செத்து கருவாடாகி எலும்புக்கூடான நிலையில் உடல் சிதறிய பாகங்களுடன் பல்லியொன்று கிடந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். காரணம் பல்லி செத்து எலும்புக்கூடாய் கிடந்ததாக கூறப்படும் காம்ப்ளான் உணவைத்தான் 1 வயது குழந்தையான கோபிகாவுக்கு சாப்பிட கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் குழந்தைக்கு என்னவோ ? ஏதோ ? என்று பதறிப்போன குழந்தையின் பெற்றோர்கள் அதிர்ச்சியால் சில நிமிடங்கள் அதிர்ந்து போனார்கள். இதனையடுத்து குழந்தையின் தந்தையான ஜெயக்குமார் பல்லி செத்து கிடந்ததாக கூறப்படும் காம்ப்ளான் அட்டை பெட்டியை கொண்டு சென்று மெடிக்கல் ஷாப் கடைக்காரரிடம் காண்பித்து நடந்ததை கூறியுள்ளார். அப்போது மெடிக்கல் கடைக்காரர் குழந்தையின் தந்தையை மேலும், கீழுமாக பார்த்து விட்டு இந்த காம்ப்ளான் அட்டைப்பெட்டி இங்கு வாங்கவில்லை எனவும் அப்படியே ஒரு வேளை வாங்கிருந்தாலும் உங்களது வீட்லதான் பல்லி விழுந்திருக்கும் அங்க போயி பாருங்க என பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான குழந்தையின் தந்தையான ஜெயக்குமார் மேலும் மெடிக்கல் கடைக்காரரிடம் வேறொரு புதிய காம்ப்ளான் பாக்கெட் மாற்றி தருமாறும் கேட்டுள்ளார். அதற்கு மெடிக்கல் கடைக்காரர் முடியவே முடியாதென கூறி தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் குழந்தையின் தந்தையான ஜெயக்குமார் கடையிலிருந்து ஏமாற்றதுடன் வீடு திரும்பினார். இதற்கிடையில் குழந்தைக்கு அவ்வப்போது வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர்கள் விலை கொடுத்து வாங்கி அதனால் சேவைக்குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோர் என்ற முறையில் காம்ப்ளான் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பல்லி விழுந்த காம்ப்ளான் உணவை ஏதுமறியாத குழந்தைக்கு கொடுத்த நிலையில் அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தங்களுக்கு காம்ப்ளான் கம்பெனி நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கக்கோரியும் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுக்க போவதாக குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story