ஹோட்டலில் வாங்கிய இறைச்சியில் பல்லி
சிக்கனில் பல்லி
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் புவநேந்திரன்.இவர் குடும்பத்துடன் மார்தாண்டம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகன் ரோஹித் நேற்று இரவு மார்தண்டத்தில்உள்ள ஹோட்டல் ஒன்றில் இறைச்சி வாங்கி வந்துள்ளார்.
பின்னர் தந்தையும் மகனும் சாப்பிட பார்சலை பிரித்த போது அதில் இறைச்சியுடன் வால் முறிந்த நிலையில் இறந்த பல்லியும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்,உடனே இறைச்சியுடன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ரோகித் புகார் அளித்தார்,இது குறித்து போலிசார் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கிளாட்சன் தலைமையில் ஹோட்டலுக்கு வந்த அதிகாரிகள் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களை வெளியேற்றி விட்டு இறைச்சியை பரிசோதனை செய்தார்.
மேலும் ஆய்வக பரிசோதனைக்கும் இறைச்சியை எடுத்து சென்றனர்.இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபல ஹோட்டல்களில் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,அதே வேளையில் மக்களின் பாதுகாப்பு கருதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் ஹோட்டல்களில் தீவிர பரிசோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.