குன்னூரில் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு

குன்னூரில் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு

எல்.முருகன் தேர்தல் பிரச்சாரம் 

குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நீலகிரி நாடாளுமன்ற (தனி)தொகுதியின் பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகன் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிகரட்டி, ஆருகுச்சி, தூதூர்மட்டம், சேலாஸ் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

எல். முருகன் பேசியதாவது: உலகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாக உள்ள ஊட்டி ,குன்னூருக்கு ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில்,சுற்றுலா பயணிகளை உள்வாங்கும் உட்கட்டமைப்பை இதற்கு முன்பு ஆண்ட அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கட்சிகள் செய்ய தவறிவிட்டன. நீலகிரி மாவட்டத்தில் சிறு குறு விவசாயிகள் பிரதான தொழிலாக செய்து வரும் பசுந்தேயிலைக்கு உரிய விலை இதுவரை கிடைக்கவில்லை.

இதற்காக சிறு குறு தேயிலை விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளனர். ஆனால் கடந்த இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஆ.ராசா பசுந்தேயிலைக்கு ஒரு சிறு துரும்பு கூட கில்லி போடவில்லை. பா.ஜ.க., அரசு நீலகிரியில் உள்ள சிறு குறு விவசாயத் தலைவர்களை அழைத்து சென்று பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மேலும் நீலகிரி தேயிலை தூள் விற்பனையை ஒரு மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனமான அமுல் நிறுவனத்தை அறிமுகப்படுத்தி வணிகம் செய்ய நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் இது சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அல்ல உள்ளூர் மக்களுக்கும் தான் இவற்றையெல்லாம் சரிசெய்ய தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Read MoreRead Less
Next Story