காங்கேயத்தில் லோடு ஆட்டோவும், சரக்கு வேனும் மோதி விபத்து
காங்கேயத்தில் லோடு ஆட்டோவும், சரக்கு வேனும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர்கள் சிறு காயங்களுடன் தப்பினார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதிக்குட்பட்ட ஹாஸ்டல் ஸ்டாப் அருகே நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் லோடு ஆட்டோவும், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு வேனும் ஒன்றின் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் சென்று சரக்கு வேன் அதிவேகமாக முன்னால் சென்று லோடு ஆட்டோவின் மீது மோதியது. இதில் லோடு ஆட்டோ சாலையின் நடுவே இருந்த சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் கூடியது. பின்னர் அருகில் இருந்தவர்கள் விபத்துக்குள்ளான ஓட்டுநர்களை எந்தவொரு காயங்களும் இன்றி மீட்டனர். மேலும் சிறிது நேரத்தில் அங்கிருந்து வாகனங்கள் இரண்டையும் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
Next Story