சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்க பொதுகுழு கூட்டம்

சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்க பொதுகுழு கூட்டம்
X

சங்க பொதுகுழு கூட்டம்


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் 34 ஆவது பொதுகுழு கூட்டம் . வேப்பந்தட்டையில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள தனியார் அரங்கில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தில் 34 ஆவது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, சங்கத்தின் மாநிலத் தலைவர் வீரராகவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சரவணன் மாநிலத் துணைத் தலைவர் தனபாலன் மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 50 ஆண்டுகளாக தினக்கூலிகளாக பணி செய்து வருகின்றோம், இதில் கடந்த 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் மாத ஊதியம் பணி பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளுக்காக போராடி வருகிறோம் இதில், தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சுமை தூக்கும் தொழிலாளர்களின்.

கோரிக்கைகளான 03.04.2023 அன்று நிர்வாகத்திடம் வழங்கிய சுமைதூக்கும் தொழிலாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் 24.4.2023 அன்று பேச்சுவார்த்தையில் நிர்வாகம் உறுதி அளித்து நிறைவேற்றாததை நிறைவேற்ற கோரியும், சுமை தூக்கும் தொழிலாளர்களின் நலனை காக்க பல கட்ட போராட்டங்கள் நடத்துவது, என்றும், மேலும் சங்க அங்கீகார தேர்தலை நடத்துவது, கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில்,

மாநில பொருளாளர் பாஸ்கரன் மாநில அமைப்பு செயலாளர் முனுசாமி மாநிலத் துணைச் செயலாளர் தெய்வேந்திரன்,மாநில அவைத் தலைவர் கமலநாதன் மாநில இணைச்செயலாளர் அன்னக்கொடி உள்ளிட்ட பெரம்பலூர் மாவட்ட சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் பொருளாளர் பாலமுருகன், மாவட்ட துணைத தலைவர் ஜயப்பன், மாவட்ட, மேற்ப்பட்ட துணைசெயலாளர் மனி , அமைப்பு தலைவர், 'செல்வராஜ் உள்ளிட்ட பெரம்பலூர் திருச்சி கடலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட 29 மாவட்டங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story