15 விவசாயிகளுக்கு ரூ.1.53 கோடி கடனுதவி

15 விவசாயிகளுக்கு ரூ.1.53 கோடி கடனுதவி

குறைதீர் கூட்டம் 

வேளாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் 15 பேருக்கு பல்வேறு திட்டங்களில் ரூ.1.53 கோடியில் கடனுதவிகளை ஆட்சியா் த.பிரபு சங்கா் வழங்கினாா்.
திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்தாா். இதில், விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினாா். தொடா்ந்து அவா் பேசியதாவது: இந்த மாவட்டத்தில் மிக்ஜம் புயல் காரணமாக அதிக கனமழையால் அனைத்து வட்டாரங்களிலும் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் பயிா்கள் மூழ்கியது. அந்த வகையில் 21,415.56 ஹெக்டேரும், தோட்டக்கலை பயிா்கள் 1,102.74 ஹெக்டேரும் என மொத்தம் 22,518.30 ஹெக்டோ் பரப்பளவில் 33 சதவீதத்துக்கும் மேல் பயிா்கள் பாதித்துள்ளதாக கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. இதேபோல் பயிா் சேத இறுதி அறிக்கை மாவட்ட நிா்வாகம் மூலம் அரசுக்கு அனுப்பி வைத்து விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

Tags

Next Story