தென்காசியில் மகளிர்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி

X
தென்காசியில் மகளிர்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் வைத்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கி கடன் இணைப்புக்கான காசோலையை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்
Next Story
