கன்னியாகுமரி: மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு  கடனுதவி

கன்னியாகுமரி: மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு  கடனுதவி
கன்னியாகுமரி மாவட்ட சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர், கலெக்டர்
கன்னியாகுமரியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் இன்று (08.02.2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் த.மனோ தங்கராஜ், கலந்து கொண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கி பேசுகையில்,

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 489 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.47.58 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். சுயஉதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு சுயதொழில் மேற்கொள்ளுவதற்கு வங்கிகள் மூலம் கடன் இணைப்பு ஏற்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2023-2024-ஆம் ஆண்டிற்கு ரூ.578.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது பேசினார்.

தொடர்ந்து மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அதிகளவு கடனுதவிகள் வழங்கிய வங்கிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், சிறந்த வங்கி கிளைகளுக்கு விருது மற்றும் ரொக்கப்பரிசினை வழங்கியதோடு, மூன்று பயனாளிகளுக்கு சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கான மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன், குழித்துறை நகராட்சி தலைவர் பொன்.ஆசை தம்பி, மகளிர் திட்ட அலுவலர்கள், பணியாளர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story