சிவகங்கை : மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடனுதவி

சிவகங்கை : மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடனுதவி

மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடனுதவி

சிவகங்கையில் 41 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழாவில் ரூபாய் 5.22 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டது
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் , மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய சிற்றுண்டி உணவகத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்து மானாமதுரை வட்டத்திற்குட்பட்ட 17 மகளிர் சுய உதவிக்குழு மற்றும் சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட 24 மகளிர் சுய உதவிக்குழு 41 மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.5.22 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடனுதவிகளை வழங்கினார்.

Tags

Next Story