திருப்பூரில் கடன் மோசடி: நான்கு பேர் மீது குண்டாஸ்.

திருப்பூரில் கடன் மோசடி:  நான்கு பேர் மீது குண்டாஸ்.

கைது செய்யப்பட்டவர்

திருப்பூரில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ. 43லட்சம் மோசடி செய்த பெண் உட்பட 4 பேர் குண்டாஸ் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் கடன் வாங்கி தருவதாகக்கூறி ரூ.43 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நீலகாட்டுப்புதூர் பகுதியில் பைனான்ஸ் நிறுவனத்தில், காங்கேயம் பாப்பினி கிராமத்தை சேர்ந்த அருண்குமார் (27) என்பவர் கடன் வாங்க சென்ற போது,

கோபி என்ற வேதகிரி (40), தேவிகா என்ற பிரித்தீ (42), அருண்குமார் என்ற சிவபிரகாஷ் (36), ஜான் கென்னடி என்ற அந்தோணி விணி சந்தர் (34) ஆகியோர் கடன் பெறுவதற்கு காப்பீடு தொகை ரூ.11 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கேட்டு ரூ.11 ஆயிரம் பெற்றுக்கொண்டு கடன் வழங்காமல் போலி காசோலையை வழங்கி ஏமாற்றியுள்ளனர்.

மேலும், கடந்த ஆகஸ்டு மாதம் 14&ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 9&ந் தேதி வரை மகளிர் குழு மற்றும் தனிநபர் கடன் என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ.43 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்து தலைமறைவாகி விட்டனர்.

இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, கோபி, தேவிகா, அருண்குமார், ஜான் கென்னடி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் 4 பேர் மீதும் திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

அதன் பேரில் கோவை மத்திய சிறையில் உள்ள 4 பேரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டது.

Tags

Next Story