நெசவாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம்
கடனுதவி வழங்கும் திட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் எமனேஸ்வரத்தில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். நெசவாளர்களுக்கு முத்ரா கடன் வழங்கும் திட்டம் மத்திய அரசினால் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தொழில் மூலதனம், நெசவு இயந்திரம் வாங்குதல், நெசவுக்கான மூலப் பொருட்கள் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய துணி நூல் அமைச்சகம் மற்றும் மாநில அரசின் கைத்தறி துறையோடு இணைந்து நெசவாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். முத்ரா லோன் மேளா கூட்டத்தில் 91 பயனாளிகளுக்கு 41 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளும், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மூன்று பயனாளிகளுக்கு மூன்று லட்சத்து 19 ஆயிரத்து 473 ரூபாய் மதிப்பிலான நலத்தட்டு உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நெசவு தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கைத்தறி துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.