வீடு கட்ட வாங்கிய கடன்- தற்கொலை செய்த வாலிபர்

வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, மத்தகிரி கிராமம், பாலிகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் வயது 38. இவர் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அவ்வாறு,வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால், விரக்தி அடைந்த ராஜலிங்கம், டிசம்பர் 18ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அவரது மனைவி தாமரை வயது 33 என்பவர், இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர்,

உயிரிழந்த ராஜலிங்கத்தின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சிந்தாமணிப்பட்டி காவல் துறையினர்.

Tags

Next Story