நவாஸ் கனியை ஆதரித்து அமைச்சர் தலைமையில் பரப்புரை கூட்டம்

நவாஸ் கனியை ஆதரித்து அமைச்சர் தலைமையில் பரப்பரை கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் இன்டியா கூட்டணியின் வேட்பாளர் இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து கல்குறிச்சி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு நவாஸ் கனிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ''உங்கள் வாக்கு யாருக்கு என்பதை முடிவு செய்து இருப்பீர்கள் எனவும் கல்குறிச்சியில் ஓட்டு பெட்டியை திறந்தால் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆயிரம் ஓட்டுகள் கூட கிடைக்கும் என்பது மரபு அதேபோல் எப்பொழுது தேர்தல் வந்தாலும் கல்குறிச்சி வாக்குப்பெட்டி நமக்கு தூக்கி விடக்கூடிய கை கல்குறிச்சி என்பதை உணர்ந்து இருப்பதாகவும், நவாஸ் கனி கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து நமது பகுதிக்கு பல்வேறு திட்டங்களை செய்திருப்பதாகவும் அப்படி நிறைவேற்றி உள்ளவர் அதன் காரணமாக மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினராக வந்து தன்னுடன் உறுதுணையாக இருப்பார் என்ற காரணத்தால் அவருக்கு வாக்கு கேட்டு வந்திருப்பதாகவும் கூறினார்.

தமிழக முதல்வரிடம் மகளிர் உரிமைத் தொகை வழங்கி வருகிறோம் அதற்கு தமிழக முதல்வர் உங்களுக்கு வெறும் கரும்பை மட்டும் கொடுத்துவிட்டு ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்காவிட்டால் அந்த கரும்பு இனிக்காது எனக் கூறி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் விற்கப்படும் முதல்வர் கொடுத்ததாகவும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் உரிமைத் தொகை ஒரு அண்ணன் கொடுக்கக்கூடிய தாய் வீட்டு சீதனம் யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை மூலம் பல வரவில்லையோ அதன் கணக்கெடுப்பு நடந்து வருவதாகவும் தேர்தல் முடிந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் எனவும் கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜா கண்ணப்பன் அவர்கள் பேசுகையில், ''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நல்ல முதல்வரை நாடு கண்டிருப்பதாகவும் இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களை விட நம்பர் ஒன் முதல்வராக தமிழக முதல்வர் இருப்பதாகவும், யார் வரவேண்டும்? யார் வர வேண்டாம் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் மோடி வரக்கூடாது என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் எனவும் கூறினார். அண்ணா கூறியது மத்தியில் கூட்டாட்சி கலைஞர் கூறியது மாநிலத்தில் சுயாட்சி கலைஞர் கூறியது போல தமிழகத்தில் தற்போது சுயாட்சி நடைபெற்று வருவதாகவும் அதேபோல் அண்ணா கூறியது போல் மத்தியில் கூட்டாட்சி அமைய வேண்டும் மத்தியில் கூட்டாட்சி அமைந்தால்தான் தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேறும் காங்கிரஸ் கட்சி கூட்டாட்சி வைத்துக் கொள்வோம் என கூறுவதாகவும், மோடிக்கு தமிழக முதல்வர் மீது தான் கோபமாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியை சும்மா இருந்த பொழுது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தான் இந்த இந்தியா கூட்டணியை உருவாக்கினார். நிவாரண நிதியை உரிமையை கேட்பதாகவும் ஆனால் மத்திய நிதி அமைச்சர் பாதிப்புகளை பார்த்துவிட்டு நிவாரணம் தருவதாக கூறிவிட்டு அல்வா கொடுத்து விட்டதாகவும் மத்திய அரசிடம் இருந்து நாம் பிச்சை கேட்கவில்லை நமது உரிமையை தான் கேட்கிறோம் என கூறினார்.

திமுக தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல அது ஒரு சித்தாந்தம் எனவும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்றால் என்ன இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று விட்டால் சாகும்வரை மோடி தான் நாட்டை ஆளுவார் சைனா ரஷ்யா மாறி இந்தியா மாறிவிடும் எனவும் இந்தியாவில் பல மொழிகள் பேசி வருவதால் அது சாத்தியமற்றது எனவும் கூறினார். தமிழகத்தில் எடப்பாடி கட்சி என ஒன்று இருப்பதாகவும் அந்தக் கட்சியை முடிந்து விட்டதாகவும் இரட்டை இலையில் போட்டியிட்ட இபிஎஸ்ஸில் கட்சி 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் தோற்றுவிட்டதாகவும் அந்த இடத்தில் திமுக போட்டியிட்டு இருந்தால் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்போம் எனவும் கூறினார் ஸ்டாலினின் கையை வலுப்படுத்த வேண்டும் மோடியை வீழ்த்த வேண்டும் எனவும் மோசடி செய்யும் நிதின் கற்களை உட்பட பலரை பாஜகவினர் பிடித்து உள்ளே போடாமல் கஜிருவாள் உள்ளிட்ட முதல்வர்களை திசையில் அடைப்பதாகவும் வருமான வரித்துறை அமலாக்கத் துறை உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு பாரதிய ஜனதா ஆட்சி நடத்தி வருவதாகவும் இப்படிப்பட்ட பிரதமர் நமக்கு தேவை என கேள்வி எழுப்பினார்.

Tags

Next Story