உள்ளாட்சி தினம்: இராதாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை

உள்ளாட்சி தினம்: இராதாபுரம் ஊராட்சியில்  சிறப்பு கிராம சபை

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி 

மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.50 ஆயிரம் விதம் சமுதாய முதலீட்டு நிதி ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் இராதாபுரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தபா. முருகேஷ் தெரிவித்தாவது: இன்று இராதாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் 3 மாவட்ட பயிற்சி கூடுதல் ஆட்சியர்கள் (வளர்ச்சி) பங்கேற்று வருகின்றனர். ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் 12 திட்டங்கள் குறித்த பொருள் வாசிப்பு மற்றும் கிராமத்தின் வரவு செலவு கணக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்கள் புதிய வீடு கட்டி தருதல், மேல்நீர் தேக்கத்தொட்டி, பக்க கால்வாய் சாலை வசதி அமைத்து தருதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளை கோரிக்கையாக வழங்கியுள்ளீர்கள் தகுதிவாய்ந்த அனைவருக்கும் கோரிக்கையினை பரீசிலினை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை நமது மாவட்டத்தில் 80 ஆயிரம் பேர் பதிவு செய்து உள்ளனர். அவர்களில் தகுதியானவர்களை கண்டறிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பணியாளர்களை நியமித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கிராமங்களில் குடிசை வீடு, ஒட்டு வீடுகள் இல்லாமல் சிமெண்ட் கான்கீரிட் வீடுகளை உருவாக்குதே அரசின் நோக்கமாகும் அதுமட்டுமில்லாமல் மாநில ஊரக வளர்ச்சிதுறையின் மூலம் அனைத்து ஊராட்சிகளுக்கு ஆண்டுதோறும் பல்வேறு வளர்ச்சி பணிக்காக ஊராட்சி, ஒன்றியம், மாவட்டம் ஆகிய தலைவர்களுக்கு நிதிகள் வழங்கப்படுகின்றனர். இந்த நிதிகள் அனைத்தும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் சரியான முறையில் பயன்படுத்தி கிராமங்கள் வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லவேண்டும். அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், உள்ளிட்ட எண்ணெற்ற திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்திவருகிறார். கிராம மக்களாகிய நீங்கள் கிராம சபை நடத்தபடுவதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள வேண்டும் ஏன்னொன்றால் அனைத்து துறை அலுவலர்களும் துறை சார்ந்த திட்டங்களை விளக்குவதற்காக தற்போது வருகை தந்துள்ளர்கள் எனவே அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து 4 மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.50 ஆயிரம் விதம் சமுதாய முதலீட்டு நிதி ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப்,கூடுதல் ஆட்சியர்கள் (பயிற்சி) ஜெய் நாராயணன்.சரண்யா, பிரியங்கா, தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், மாவட்டக்குழு உறுப்பினர் திவ்யா சபாரத்தினம், ஊராட்சிமன்ற தலைவர் இராதாபுரம் ஊராட்சி .அலமேலு குமார், ஒன்றிய கவுன்சிலர் இராதாபுரம், அஸ்மத்பீ ஜானி, உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story