திமுக சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்

திமுக சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலை நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும், திமுக பொருளாளருமான டி. ஆர். பாலு உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது மக்களவைத் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. திமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரும் திமுக பொருளாளருமான டி. ஆர். பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பரசன், "தமிழகத்தில் நம்மை தவிர பலமான கூட்டணி யாரும் கிடையாது. கூட்டணி பலமாக உள்ளது என யாரும் சும்மாவும் இருக்கக்கூடாது.

உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் பிறகு வைத்துக் கொள்ளுங்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நமது ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் 100 நாள் வேலைக்கான பணத்தைத் தரவில்லை. அதைக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்" என்றார்

Tags

Next Story