நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
ஆட்சியர் கார்த்திகேயன்
நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் வருகின்ற 21ஆம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 7) அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற 29ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story