வாடகை செலுத்தாத 10 கடைகளுக்குப் பூட்டு
பூட்டப்பட்ட கடைகள்
திண்டுக்கல் காந்தி காய்கறிச் சந்தையில், மாநகராட்சி சாா்பில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இதில், கடைகளை ஏலம் எடுத்த வியாபாரிகள், மாநகராட்சிக்கு வாடகை செலுத்த வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்த வியாபாரிகள் 10 பேருக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், எச்சரிக்கை குறிப்பாணை வழங்கப்பட்டது. இதையடுத்து, வாடகை நிலுவை வைத்துள்ள 10 கடைகளையும் பூட்டுவதற்கு மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா். அதன்படி, வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கும் மாநகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பூட்டுப் போட்டனா்.
Next Story