காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத்

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத்

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மூலம் வழக்குகளை தீர்க்கும் லோக் அதாலத் நிகழ்வு தொடங்கியது.


காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மூலம் வழக்குகளை தீர்க்கும் லோக் அதாலத் நிகழ்வு தொடங்கியது.

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மூலம் வழக்குகளை தீர்க்கும் லோக் அதாலத் நிகழ்வு தொடங்கியது.முதல் இரு வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளில் 24 லட்சம் ரூபாய் இரு குடும்பங்களுக்கு காசோலைகளை நீதிபதிகள் வழங்கினர். தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் தமிழ் நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம்.

நிலுவையில் உள்ள வழக்குகளில் இரு தரப்பினரும் சமரசத்திற்கு உடன்பட்டால் நீதிபதி முன்னிலையில் வழக்கு கையாளப்பட்டு இதற்கான தீர்வு காணப்படும். இதன் மூலம் வழக்கு நிலுவைகளின் தேக்கம் வெகுவாக குறைந்து வந்ததால், மக்கள் கால தாமதத்தை தவிர்க்க இதை பயன்படுத்திக் கொண்டு இருந்தனர் இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு. வங்கி வாராக் கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும் பநல வழக்கு மற்றும் தொழிலாளர் நல வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

அவ்வகையில் இன்று வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் நீதிபதி அருண் சபாபதி தலைமையில் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காலை 10 மணிக்கு துவங்கியது. இதில் தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா, நீதிபதிகள் வசந்தகுமார் சதீஷ்குமார் இனிய கருணாகரன் உள்ளிட்டோர் பல்வேறு அமர்வுகளில் இன்று வழக்குகளை கையாள உள்ளனர்.

முதல் நிகழ்வாக சோகண்டி பகுதியில் ரேணுகாதேவி என்பவர் வாகன விபத்தில் இறந்த வழக்கில் அக்குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூபாய் 17 லட்சத்து 50 ஆயிரம், நெமிலி பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருந்த அனுசையா குடும்பத்திற்கு 6,50,000 என இரு குடும்பங்களுக்கு 24 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை நீதிபதிகள் வழங்கினர். மாலை 4 மணி வரை இந்த வழக்குகள் கையாளப்பட்டு சமரசம் தீர்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த நிகழ்வில் அரசு வழக்கறிஞர் சத்தியமூர்த்தி , பத்மநாபன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story