மக்களவை வேட்பாளர் அறிமுக கூட்டம் !
மக்களவை வேட்பாளர் அறிமுக கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-செந்துறை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ம.க திண்டுக்கல் மக்களவை வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திண்டுக்கல் மக்களவை வேட்பாளராக பாமக கட்சியைச் சேர்ந்த திலகபாமா நிறுத்தப்பட்டுள்ளார். இந்தநிலையில் கூட்டணி கட்சிகளுடன் செயல்வீரர்கள் கூட்டம் நத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பாமக வேட்பாளர் திலகபாமா பேசியதாவது : பெண்கள் நிலைத்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும். திமுக ஆட்சியில் கல்விக்கடனே அடைப்போம் என்று சொன்னார்கள் ஏமாற்றி விட்டார்கள். மதுபானகடைகளை அடைப்போம் என்று வாக்குறுதி சொல்லியும் ஏமாற்றி விட்டார்கள். நீட் தேர்வு நீக்கம், அனைத்து மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தொகை தருகிறோம் என்று வாக்குகுறுதி நம்பி ஏமாந்து கொண்டு தான் இருக்கிறோம் என்று பேசினார்.
Next Story