அரியலூரில் மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
மக்களை தேர்தல் தொடர்பாக ஆலோசனை
ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பயிற்சி
மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல காவல் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில், மண்டல அலுவலர்கள் தங்கள் பகுதிக்குரிய வாக்குசாவடி மையத்தினை ஆய்வு செய்தனர். அடிப்படை வசதிகள் குறித்தும், பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குசாவடிகள் குறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டது. மேலும் வாக்குசாவடி மைய அலுவலர்களுக்கு முறையான பயிற்சி வழங்கவும் அறிவுறுத்தபட்டது.
இதில் 52 மண்டல அலுவலர்கள், 52 மண்டல காவல் அதிகாரிகள் மற்றும் அனைத்துதுறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story