மக்களவை தேர்தல் : 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

X
கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்
நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் (புதன்கிழமை) தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள், வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவியிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது முதல் மனுக்கள் பரிசீலனை நடைபெறும் நாள் வரை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் அதிகம் பேர் வந்து செல்வார்கள். இதனால் பாதுகாப்பு கருதி கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் உள்பட கலெக்டர் அலுவலகம் முழுவதும் 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Next Story
